தேசிய செய்திகள்

ஒமைக்ரானுக்கு எதிராக ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசியால் நல்ல பலன் - ஆய்வு முடிவு + "||" + Good effect of ‘booster dose’ vaccine against Omicron - study results

ஒமைக்ரானுக்கு எதிராக ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசியால் நல்ல பலன் - ஆய்வு முடிவு

ஒமைக்ரானுக்கு எதிராக ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசியால் நல்ல பலன் - ஆய்வு முடிவு
ஒமைக்ரானுக்கு எதிராக ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசியால் நல்ல பலன் கிடைப்பதாக ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும், நாள்பட்ட நோயுடன் போராடுகிற 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் முன்எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த நிலையில், கோவேக்சின் தடுப்பூசியை 2-வது டோஸ் செலுத்தி, 6 மாதங்களுக்கு பின்னர் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசியாக செலுத்திக்கொள்கிறபோது, அது ஒமைக்ரான் மற்றும் டெல்டா வகை உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக நல்ல பலன் அளிக்கிறது என்று அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த தகவலை கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்து வினியோகிக்கும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒமைக்ரான் பாதிப்பால் உலகம் முழுவதும் 115 பேர் உயிரிழப்பு; மத்திய சுகாதாரத்துறை
டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரானுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயம் குறைவாகவே உள்ளது.
2. ஒமைக்ரானுக்கு எதிரான தடுப்பூசி மார்ச் மாதம் தயாராகி விடும்..! பிரபல மருந்து நிறுவனம் தகவல்
ஒமைக்ரான் வைரசுக்கு எதிரான தடுப்பூசி மார்ச் மாதம் தயாராகி விடும் என்று பிரபல மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.
3. மகர சங்கராந்தி; கங்கையில் புனித நீராட பக்தர்களுக்கு தடை
இந்தியாவில் ஒமைக்ரான் பரவியுள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
4. அமெரிக்காவில் இதுவரை 7.5 கோடி பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 7.5 கோடி பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. கேரளாவில் மேலும் 17 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
இந்தியாவிலும் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் கால் பதித்த ஒமைக்ரான் காட்டுத்தீ போல பரவி விட்டது.