தேசிய செய்திகள்

கொரோனா பரவல்: முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை + "||" + Corona spread: Prime Minister Modi today consults with first-ministers

கொரோனா பரவல்: முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா பரவல்: முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லி,

ஒமைக்ரான் வைரஸ் தாக்கத்தால் நாட்டில் மூன்றாவது அலை உருவாகி உள்ளது. கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கையும் தினமும் ஒரு லட்சத்துக்கு மேல் அதிகரித்து வருகிறது.

அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளன. பெரும்பாலான மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளன. முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் இன்று (வியாழக்கிழமை) காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

மாலை 4.30 மணிக்கு நடைபெறும்  இந்த ஆலோசனையின் போது  தடுப்பூசி செலுத்தும் வேகம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து  பிரதமர் மோடி விவாதிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் கொரோனா பரவல்; 3 நகரங்களில் முழு ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாக சீனாவில் இதுவரை 3 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
2. கொரோனா பரவல்: முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
3. நாடாளுமன்றத்தில் கொரோனா பரவல்; பட்ஜெட் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரம்
நாடாளுமன்றத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
4. கொரோனா பரவல் அதிகரிப்பு: சமூக இடைவெளியை கடைபிடிக்க கடைகளின் முன்பு மீண்டும் வட்டம்
கொரோனா பரவல் அதிகரிப்பு சமூக இடைவெளியை கடைபிடிக்க கடைகளின் முன்பு மீண்டும் வட்டம்
5. கொரோனா பரவல் அதிகரிப்பு; மாநில முதல்-அமைச்சர்களுடன் விரைவில் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் விரைவில் மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.