மாநில செய்திகள்

ஊரை விட்டு ஓடி காதலனை மணந்த கல்லூரி மாணவி; திருமண புகைப்படங்களை வாட்ஸ்-அப் மூலம் பெற்றோருக்கு அனுப்பினார் + "||" + College Student Married her Lover without Parents Consent and Sent Marriage Pictures Through Whats Up

ஊரை விட்டு ஓடி காதலனை மணந்த கல்லூரி மாணவி; திருமண புகைப்படங்களை வாட்ஸ்-அப் மூலம் பெற்றோருக்கு அனுப்பினார்

ஊரை விட்டு ஓடி காதலனை மணந்த கல்லூரி மாணவி; திருமண புகைப்படங்களை வாட்ஸ்-அப் மூலம் பெற்றோருக்கு அனுப்பினார்
ஊரைவிட்டு ஓடி காதலனை திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி திருமண புகைப்படங்களை வாட்ஸ்-அப் மூலம் பெற்றோருக்கு அனுப்பி வைத்தார்.
கன்னியாகுமரி,

மார்த்தாண்டம் அருகே ஊரை விட்டு ஓடி காதலனை மணந்த மாணவி, திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை பெற்றோருக்கு அனுப்பினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி

மார்த்தாண்டம் அருகே கரவிளாகம் பகுதியை சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க நபர், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். 2-வது மகளுக்கு 18 வயது ஆகிறது. இவர் ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்தநிலையில் மாணவியும், அதே பகுதியை சேர்ந்த டிப்ளமோ படித்திருந்த 25 வயது வாலிபரும் காதலித்து வந்தனர். வாலிபர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

திடீர் மாயம்

இதற்கிடையே கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதில், மகளை யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என தெரிவித்திருந்தனர். அதன்பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

காதலனுடன் திருமணம்

இந்தநிலையில் மாணவி தனது பெற்றோருக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவித்தார். அதில், காதலனுடன் கோழிக்கோட்டில் இருப்பதாகவும் அங்குள்ள ஒரு கிருஷ்ணன் கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இனி கணவன், மனைவியாக வாழ போவதாகவும், திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டீர்கள் என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்ததாகவும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என்றும் வாட்ஸ்-அப்பில் தெரிவித்துள்ளார். மேலும் காதலனுடன் திருமணம் செய்து மாலை மாற்றிக் கொண்ட புகைப்படங்களையும் அனுப்பியதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. நிரம்பி வழிந்த படகு போக்குவரத்து!
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.
2. ஜாவித் புயல் எதிரொலி - இரண்டு ரெயில்கள் ரத்து!
ஜாவித் புயல் சின்னம் காரணமாக இரண்டு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3. கன்னியாகுமரியில் மழை பாதிப்பு குறித்து நாளை மத்திய குழு ஆய்வு
கன்னியாகுமரியில் மழை பாதிப்பு குறித்து 11 இடங்களில் நாளை மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
4. கன்னியாகுமரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு...!
மழைக்காலம் முடிந்த பின், எதிர்க்கட்சி செய்த அக்கிரமத்தை தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. வெள்ளத்தில் தத்தளிக்கும் கன்னியாகுமரி - மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு
மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை கன்னியாகுமரி செல்கிறார்.