மாநில செய்திகள்

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கியது...! + "||" + The first Jallikattu of this year: Started in Pudukkottai district ...!

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கியது...!

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கியது...!
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
புதுக்கோட்டை,

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு கடும் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று (வியாழக்கிழமை) காலை ஜல்லிக்கட்டு தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டில் (2022) நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இதுவாகும்.

முன்னதாக இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். தச்சங்குறிச்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்தனர். 

இதில் புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து மாடுபிடி வீரர்கள் வருகை தந்து தங்களது பெயர்களை ஆர்வமுடன் பதிவு செய்தனர். அவர்களிடம் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்து அனுமதி வழங்கி வழங்கப்பட்டது. இதேபோல காளைகளையும் அதன் உரிமையாளர்கள் பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட்டது.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி ஜல்லிக்கட்டு நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்கள் மற்றும் 700 காளைகள் பங்கேற்றுள்ளன.

தற்போது சீறிப்பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கி பரிசுகளைத் தட்டிச்சென்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கிராம மக்கள் மனு
பெரிய கலையம்புத்தூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கிராம மக்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
2. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது ஜல்லிக்கட்டு: வன்னியன்விடுதியில் சீறி பாய்ந்த காளைகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது ஜல்லிக்கட்டு போட்டி ஆலங்குடி அருகே வன்னியன்விடுதி கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
3. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
4. பாலமேடு ஜல்லிக்கட்டில் தொடர்ந்து 3வது ஆண்டாக அதிக காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற பிரபாகரன்..!
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டத்தில் உள்ள பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் 21 மாடுகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.
5. பாலமேடு ஜல்லிக்கட்டு: 6ம் சுற்று நிறைவு: 545 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன; 28 பேர் காயம்..!!
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 6ம் சுற்று நிறைவுபெற்று உள்ளது. 545 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன; 28 பேர் காயம் அடைந்து உள்ளனர்.