மாநில செய்திகள்

லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி - பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்ற போது சோகம்...! + "||" + Car Lorry Accident Kills 2 in Perambalur in today Morning

லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி - பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்ற போது சோகம்...!

லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி - பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்ற போது சோகம்...!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்ற 2 பேர் உயிரிழந்தனர்.
பெரம்பலூர்,

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே இன்று அதிகாலை முன்னாள் சென்ற டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் திருச்சியை சேர்ந்த குமார் மற்றும் வெங்கடவரதன் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பொங்கல் பண்டிக்கைக்காக சொந்த ஊருக்கு காரில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான லாரியும் தீக்கிரையாகியுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ரேஷன்கடை விற்பனையாளர் உள்பட 2 பேர் சாவு
சிவகங்கை அருகே நடைபெற்ற இரு வெவ்வேறு விபத்துக்களில் ரேஷன் கடை விற்பனையாளர் உள்பட 2 பேர் இறந்தனர்.
2. ஆட்டோ குறுக்கே வந்ததால் பஸ்- லாரி மோதல்; 22 பேர் படுகாயம்
ஆட்டோ குறுக்கே வந்ததால் பஸ்-லாரி மோதிக்கொண்டதில் 22 பேர் படுகாயமடைந்தனர்.
3. விறகு ஏற்றி வந்த லாரி மோதி தலை நசுங்கி தொழிலாளி பலி
ஆலங்குடியில் விறகு ஏற்றி வந்த லாரி மோதியதில் தலை நசுங்கி தொழிலாளி பலியானார்.
4. மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; வடமாநில வாலிபர் பலி
கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்குவேன் மோதியதில் வடமாநில வாலிபர் பலியானார். படுகாயம் அடைந்த கல்லூரி மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5. நிதி நிறுவன ஊழியர் லாரி மோதி பலி
நிதி நிறுவன ஊழியர் லாரி மோதி பலியானர்.