மாநில செய்திகள்

5 பேரை பலி கொண்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் - தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர் கைது + "||" + Fire Crakers Factory Explosion Kills 5 in Virudhunagar Owner of the Factory Arrested

5 பேரை பலி கொண்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் - தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர் கைது

5 பேரை பலி கொண்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் - தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர் கைது
விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 1-ம் தேதி நடைபெற்ற வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே களத்தூர் நாகலாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 1-ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையில் வேலை 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த வெடிவிபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் வழிவிடு முருகன் (வயது 42) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஆலை உரிமையாளர் வழிவிடு முருகன் தலைமறைவானார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளர் வழிவிடு முருகனை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விருதுநகர், ராமநாதபுரம் புதிய மருத்துவக்கல்லூரிகள் நாளை திறப்பு - மோடி, மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்கள்
விருதுநகர், ராமநாதபுரம் உள்பட 11 மருத்துவக்கல்லூரிகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கின்றனர்.
2. விருதுநகரில் சாலை வசதி கோரி மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிக்கான சாலை வசதி கோரி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.