மாநில செய்திகள்

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் ; வாகன ஓட்டிகள் அவதி + "||" + Heavy snowfall in and around Tiruvallur; Motorists suffer

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் ; வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் ; வாகன ஓட்டிகள் அவதி
திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.மின்சார ரெயில்கள் ஊர்ந்து சென்றன.
திருவள்ளூர்,

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஈக்காடு, புட்லூர், காக்களூர், செவ்வாப்பேட்டை, அரண்வாயல், பெருமாள்பட்டு, திருமழிசை, வெள்ளவேடு, மணவாளநகர், ஒண்டிகுப்பம் திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, பண்ணூர், கீழச்சேரியில் சில நாட்களாக லேசான பனிமூட்டம் இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்தே கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதன்காரணமாக சாலைகளே தெரியாத அளவிற்கு பனிமூட்டமானது வெள்ளைப் போர்வை போர்த்தியது போல் காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதலே கடுமையான பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.

சாலைகள் சரியாக தெரியாததால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன. இன்று காலை 8 மணி அளவில் கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் நோக்கி சென்ற புறநகர் ரெயில், அதேபோல் அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில் சென்ற புறநகர் ரெயில்கள் அனைத்தும் மெதுவாக ஊர்ந்து சென்றன.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் அருகே ரூ.5 லட்சம் திருட்டு போனதாக பொய் புகார் அளித்தவரை எச்சரித்து அனுப்பிய போலீசார்
திருவள்ளூர் அருகே ரூ.5 லட்சம் திருட்டு போனதாக பொய் புகார் அளித்தவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
2. எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததால் தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு உயிர் தப்பிய வாலிபர்
எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததால் தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு வாலிபர் உயிர் தப்பினார். மோட்டார் சைக்கிள் 3 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு சுக்கு நூறானது.
3. திருவள்ளூர் அருகே ரூ.9½ லட்சம் மோசடி; வாலிபர் கைது
திருவள்ளூர் அருகே டெலிகிராம் மூலம் குறைந்த பணம் செலுத்தினால் அதிக பணம் தருவதாக ரூ.9½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. திருவள்ளூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை
திருவள்ளூர் அருகே தூங்கி கொண்டிருந்த தொழிலாளியின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
5. திருவள்ளூர் அருகே சேதமடைந்த பள்ளி கட்டிடத்துக்கு பதில் மற்றொரு கட்டிடம் இடிப்பு; ஒன்றிய கவுன்சிலர் கைது
கடம்பத்தூர் அருகே சேதமடைந்த பள்ளி கட்டிடத்துக்கு பதில் மற்றொரு பள்ளி கட்டிடத்தை இடித்த அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.