தேசிய செய்திகள்

நடிகை மீதான தாக்குதல்: நடிகர் திலீப் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை + "||" + Actress assault case: Crime Branch raids actor Dileep's house at Aluva

நடிகை மீதான தாக்குதல்: நடிகர் திலீப் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை

நடிகை மீதான தாக்குதல்: நடிகர் திலீப் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை
நடிகை மீதான தாக்குதல் தொடர்பாக நடிகர் திலீப் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் 2017-ல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பல்சர் சுனி இப்போதும் சிறையில் உள்ளார்.

திலீபின் நெருங்கிய நண்பராக இருந்த சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார் அளித்த பேட்டியை தொடர்ந்து தற்போது இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.  பாலச்சந்திர குமார் நேற்று இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். நடிகை தாக்குதல் வீடியோவை திலீப் தனது வீட்டில் பார்த்ததாக குமார் குற்றம் சாட்டியிருந்தார்.

நடிகை விவகாரம் தொடர்பாக ஆலுவாவில்  உள்ள நடிகர் திலீப், அவரது சகோதரர் அனூப் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தில் கேரள காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

திலீப் மீது பதிவு செய்யப்பட்டுள்ள புதிய வழக்கில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை கேரள ஐகோர்ட்டு  விசாரிக்க்க உள்ளது.  எனினும், வெள்ளிக்கிழமை வரை அவரைக் கைது செய்ய மாட்டோம் என்று அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. பல மைல் தூரத்தில் இருந்து மொபைல் மூலம் தகவல் கொடுத்த பெண் ; பிடிபட்ட நைட்டி திருடன்
கேரள கோட்டயம் மாவட்டம் தலையோலப்பரம்பு அருகே நள்ளிரவு வீட்டின் மாடியில் பதுங்கியிருந்த நைட்டி திருடனை மொபைல் மூலம் கண்டறிந்து போலீசுக்கு தகவல் கொடுத்து கைது செய்த பெண்.
2. ஜோடிகளை மாற்றி உல்லாசம்: மனைவிகளை ஈடுபடுத்த கணவர்களின் வழிமுறை- திடுக்கிடும் தகவல்
மனைவிகளை மாற்றி உல்லாச வழக்கில் குற்றவாளிகள் கோட்டயம், ஆலப்புழா, மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
3. ஜோடியை மாற்றும் குடும்ப விழா; மனைவிகளை விற்று சம்பாதிக்கும் ஆண்கள்: அதிர்ச்சி தகவல்கள்
வாட்ஸ் அப் மூலம் குடும்ப விழா என்ற பெயரில் மனைவிகளை விற்று சம்பாதிக்கும் 7 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
4. வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் இளம் மனைவிகளை மயக்கி பணம் பறிக்கும் கும்பல்
வெளிநாட்டில் வசிக்கும் கணவர்களின் இளம் மனைவிகளை குறிவைத்து பணம் நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. சினிமா எடுக்க வரதட்சணை கேட்டு கொடுமை; சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை
கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு 21 வயது சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.