மாநில செய்திகள்

ஈரோடு அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு பலி + "||" + Cow killed by country bomb near Erode

ஈரோடு அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு பலி

ஈரோடு அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு பலி
ஈரோடு அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு பலியான சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தாளவாடி,

ஈரோடு தாளவாடியை  அடுத்த சேசன்நகர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (41) விவசாயி இவர் 3 பசு மாடுகள் வளர்த்து வருகிறார்.  இன்று வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அங்கு உள்ள மானாவாரி நிலத்தில் மாடு மேய்ந்து கொண்டிருந்த போது கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை பசுமாடு கடித்துள்ளது. 

அந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசு மாட்டின் வாய்பகுதி முழுவதும் சிதறியது ரத்தம் சொட்ட  மாடு கிழே விழுந்து உயிரிழந்தது.  இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும் போது சிலர் கட்டுபன்றிகளை வேட்டையாட நாட்டுவெடி குண்டு வைத்து வேட்டையாடி வருவதாகவும் அதை மாடுகள் கடித்து உயிரிழப்பு ஏற்படுகிறது எனவும் நாட்டு வெடிகுண்டு வைக்கும் நபர்கள் மீது வனத்துறை மற்றும் காவல் துறைநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. டியூசன் படிக்க வந்த மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது
ஆசிரியர் லோகநாதனை மாவட்ட கலெக்டர் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
2. திருமுல்லைவாயல் அருகே பரிதாபம் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி துப்புரவு பெண் ஊழியர் பலி
திருமுல்லைவாயல் அருகே பணியின் போது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி மாநகராட்சி துப்புரவு பெண் ஊழியர் பலியானார்.
3. பிறந்த நாள் விழா கொண்டாடி விட்டு திரும்பிய போது விபத்து; அக்காள் - தங்கை பலி
பவானி லட்சுமி நகரில் தங்கையின் பிறந்தநாள் விழா கொண்டாடி விட்டு சித்தி மகன் பைக்கில் அமர்ந்து வந்த அக்கா, தங்கை லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தனர்
4. குரோம்பேட்டையில் மோட்டார் சைக்கிள்-மினி பஸ் மோதல்; 2 பேர் பலி
குரோம்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது மினி பஸ் மோதிய விபத்தில் நகை கடை ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
5. மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி - வாகனத்தை ஓட்டிய சிறுவன், அனுமதி அளித்த தந்தை மீது வழக்கு
மணப்பாக்கத்தில் மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் பெண் பலியானார். வாகனத்தை ஓட்டிய சிறுவன், அதற்கு அனுமதி அளித்த தந்தை ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.