மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் காவல் நீட்டிகப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் + "||" + It is disappointing that the custody of Tamil Nadu fishermen has been extended - chief Minister MK Stalin

தமிழக மீனவர்கள் காவல் நீட்டிகப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக மீனவர்கள் காவல் நீட்டிகப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக மீனவர்கள் 43 பேரின் காவல் ஜனவரி 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ஏமாற்றமளிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 43 பேரின் காவல் ஜனவரி 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ஏமாற்றமளிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில்,

"இலங்கை சிறையில் உள்ள 43 மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. மீனவர்களை உடனே விடுவிக்க, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு,  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த டிசம்பர் 19 மற்றும் 20 -ஆம் தேதிகளில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகிறார். அவர் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
2. நடன இயக்குனர் சிவசங்கர் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நடன இயக்குனர் சிவசங்கர் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
3. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகிறார். 4,335 பேருக்கு ரூ.55 கோடியே 60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
4. அமைச்சர்கள், சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் வெள்ள நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்
வெள்ள நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்திட அமைச்சர்கள், மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவுறுத்தினார். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
5. மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை மடுவின்கரை பள்ளியில் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு சாக்லேட் கொடுத்து வரவேற்றார்.