தேசிய செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொரோனா பாதிப்பு..! + "||" + Congress leader Mallikarjun Kharge tests positive for COVID-19

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொரோனா பாதிப்பு..!

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொரோனா பாதிப்பு..!
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, 

காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை காங்கிரஸ் கட்சித்தலைவருமான  மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

79 வயதாகும் கார்கே  ஏற்கனவே 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட நிலையில், அவர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இன்னும் அவர் தயாராகாத நிலையில், அவருக்கு தற்போது தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் தொடர்ந்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவரது அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மல்லிகார்ஜுன கார்கே,  கர்நாடக மாநில தலைவர் டி.கே.சிவகுமார் நடத்திய மேகதாது அணைக்கு தடை போடும்  போராட்டத்துக்கு தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கொரோனா கட்டுப்பாடுகளை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டதால், பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மாநில அரசு அச்சம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.