தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 30 பேருக்கு கொரோனா + "||" + Uttarakhand Assembly polls: 30 BSF personnel, deployed on election duty, test positive for COVID-19

உத்தரகாண்டில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 30 பேருக்கு கொரோனா

உத்தரகாண்டில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 30 பேருக்கு கொரோனா
உத்தரகாண்ட் கோட்வார் சட்டசபை தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காத்மண்டு,

உத்தரகாண்ட்  மாநிலம் கோட்வார் சட்டசபை தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 30 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,

கோட்வார் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல், பாதுகாப்புப் பணிக்காக வந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 50 ஆவது பட்டாலியனின் 'இ' நிறுவனத்தில் இருந்து வந்த 82 வீரர்களில் 30 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் "கோட்வார் தொகுதி தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்த வீரர்கள் அனைவரும் பூஜ் எல்லையில் நிறுத்தப்பட்டனர். பின்னர் செவ்வாய்க்கிழமை கோட்வார் வந்தடைந்த அனைத்து அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, அதில் 30 வீரர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது," என்று கூறினார்.