சினிமா செய்திகள்

சமந்தாவை பிரியும் முடிவு ...! இருவரின் நலன் கருதியே...!- நாக சைதன்யா + "||" + Decision to separate from Samantha was in best interests of both: Naga Chaitanya

சமந்தாவை பிரியும் முடிவு ...! இருவரின் நலன் கருதியே...!- நாக சைதன்யா

சமந்தாவை பிரியும் முடிவு ...! இருவரின் நலன் கருதியே...!- நாக சைதன்யா
சமந்தாவை பிரியும் முடிவு பரஸ்பர நலன் கருதியே எடுக்கப்பட்ட முடிவு என நடிகர் நாக சைதன்யா கூறினார்
சென்னை

நடிகை சமந்தா கடந்த அக்டோபர் மாதம் நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து தனது மூன்று ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறினார். 

திருமணத்துக்கு பிறகு சமந்தா கவர்ச்சியாக நடித்தது நாகசைதன்யா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இதனாலேயே இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்ததாகவும் கூறப்பட்டது.

இதுவரை தன்னுடைய விவாகரத்து குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல்  மவுனம் காத்து வந்த நாக சைதன்யா தற்போது பொதுமேடையில் இது குறித்து பேசி உள்ளார். 

நாக சைதன்யா தனது சமீபத்திய படமான 'பங்கர்ராஜூ' படத்தின் நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது :-

பரஸ்பர நலன் கருதியே  எனது மனைவி சமந்தாவை விட்டு பிரியும் முடிவு எடுக்கப்பட்டது. அந்த கடினமான காலங்களில் எனது முழு குடும்பமும் எனக்கு ஆதரவாக நின்றது. இது எங்கள் இருவரின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு.  அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாங்கள் இருவரும் நன்றாக இருக்கிறோம். தொழில் ரீதியாகவும் சிறப்பாக இருக்கிறோம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ் சினிமா எப்போதுமே திறமையான நடிகர்களுக்கு உரிய அங்கீகாரம் தரும் - நடிகை ஆஷா சரத்
தமிழ் சினிமா எப்போதுமே திறமையான நடிகர்களுக்கு உரிய அங்கீகாரம் தரும் மையமாக உள்ளது என நடிகை ஆஷா சரத் கூறினார்.
2. என்னைக் காப்பாற்றியது அவர்கள்தான் - சமந்தா
சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற பாடல் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நடிகை சமந்தா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசியிருக்கிறார்.
3. கொரோனாவால் முடங்கிய வலிமை தயாரிப்பாளர் குடும்பம் ... ! மீண்டது... !
போனி கபூரின் இளைய மகள் குஷி கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, போனி கபூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
4. வடையில் பிளாஸ்டிக் ; தொண்டையில் சிக்கி கொண்டது - நடிகை பரபரப்பு புகார்
ஆன்லைன் மூலம் வாங்கிய வடையில் பிளாஸ்டிக் இருந்தது அது என் தொண்டயில் சிக்கி கொண்டது என நடிகை ஒருவர் புகார் கூறி உள்ளார்.
5. "வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே" கல்லூரி நண்பர்களுடன் மம்முட்டி எடுத்த புகைப்படம்
தற்போது நடிகர் மம்முட்டி நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.