சினிமா செய்திகள்

நடிகர் திலீப் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு ; செக்ஸ் மாபியாவுடன் தொடர்பு + "||" + Actress abduction case: Dileep has links with sex racket, alleges prime accused Pulsar Suni

நடிகர் திலீப் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு ; செக்ஸ் மாபியாவுடன் தொடர்பு

நடிகர் திலீப் மீது அடுக்கடுக்காக  குற்றச்சாட்டு  ; செக்ஸ் மாபியாவுடன் தொடர்பு
பாலியல் ஆதாயத்திற்காக திலீப் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதாகவும் சுனி குற்றம்சாட்டி உள்ளார்.
திருவனந்தபுரம்

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் 2017-ல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பல்சர் சுனி இப்போதும் சிறையில் உள்ளார்.

 அதேசமயம் நடிகர் திலீப் 74 நாள்கள் சிறையில் இருந்துவிட்டு, ஜாமீனில் வெளியே வந்தார். நடிகையை கடத்தியதில் நேரடியாக தொடர்புடைய பல்சர் சுனியை தனக்கு தெரியாது என சாதித்து வந்தார் நடிகர் திலீப். திலீப்புக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. நடிகை வழக்கில் இருந்து எப்படியும் தப்பித்துவிடலாம் என மனக்கணக்கு போட்டிருந்தார் திலீப்.

ஆனால் அவரின் நெருங்கிய நண்பராக இருந்த சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார் ரூபத்தில் திலீபிற்கு எதிரான சாட்சிகள் உருவாகியுள்ளன. 2017-ல் இயக்குநர் பாலசந்திரகுமார் திலீபிற்கு நண்பராகத்தான் இருந்துள்ளார். இப்போது திடீரென திலீபிற்கு எதிரியாக மாறியுள்ளார். நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனது மனசாட்சி உறுத்துவதால் இதை வெளிப்படுத்துவதாக பாலசந்திரகுமார் கூறுகிறார். ஆனால், நடிகை தரப்பில் இருந்து வேண்டுகோள் வந்ததை அடுத்தே பாலசந்திரகுமார் திலீபிற்கு எதிராக திரும்பினார் எனவும் சொல்லப்படுகிறது.

பாலசந்திரகுமார் ஒரு தனியார் தொலைக்காட்சியில் கடந்த மாதம் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதுதான் முதன் முதலாக திலீப் குறித்த சில தகவல்களை வெளியிட்டார். "பல்சர் சுனியை தனக்கு தெரியாது எனக்கூறித்தான் திலீப் ஜாமீன் பெற்றார். ஆனால், திலீபும், பல்சர் சுனியும் ஒன்றாக அமர்ந்து பேசியதை நான் பார்த்திருக்கிறேன். திலீபின் வீட்டில் வைத்துதான் நான் அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்தேன். நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை ஒரு அதிகாரி திலீபிடம் கொண்டுவந்து கொடுத்தார். திலீப் அந்த வீடியோவை பார்த்தார் என கூறி இருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கேரள மாநில நுண்ணறிவு புலனாய்வு பிரிவு போலீசார் முடிவு செய்தனர். இதற்கு தடை விதிக்க கோரி நடிகர் திலீப் தாக்கல் செய்த மனு, விசாரணை நீதி மன்றத்தில் வருகிற 20-ஆம் தேதி அன்று பரிசீலனைக்கு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இந்த பாலியல் அத்துமீறல் வழக்கில் விசாரணை அதிகாரிகளாக செயல்பட்ட எஸ்.பி . மற்றும் சுதர்சன் மற்றும் டி.எஸ்.பி. பைஜு கே.பவுலோஸ் ஆகியோரை பகை தீர்க்க நடிகர் திலீப் கூலிப்படையை ஏவி முயற்சி செய்ய திட்டமிட்டதாகவும்,  இயக்குனர் பால சந்திரகுமார் சில பரபரப்பு தகவல்களை வெளியிட்டு இருந்தார் .

அதன் பேரில் நேற்று எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஏறத்தாழ 6 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் பால சந்திரகுமாரிடம்   இருந்து பெறப்பட்டது .  மதியம் 1.30 துவங்கிய இந்த ரகசிய வாக்கு மூலம் பெரும் நடவடிக்கைகள் மாலை 7 .30 மணி வரை நீடித்தது. 

அதில் பல்வேறு தகவல்களை பால சந்திரகுமார் இந்த வழக்கு தொடர்பாக வெளியிட்டு இருப்பதாக தெரிவித்தார். அருகே பெரிய தெரிகிறது தொடர்ந்து இது குறித்து விசாரணை தொடர்பில் விசாரணை நீட்டிக்க மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தாக்கல் செய்துள்ளது.

இதில் மிக முக்கியமான அரசியல் பிரமுகர் ஒருவர் பெயர் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அத்துடன் பல்சர் சுனி தன்னை ஜாமீனில் எடுத்து பழிவாங்க நடிகர் திலீப் முயல்வதாகவும் கூறி தனது தாயாரிடம் ஒரு கடிதம் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது .இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்சர் சுனி இருந்த சிறைச்சாலை அறையை சோதனையிட்ட போது போலீசார் அங்கு தடயங்கள் ஒன்றையும் கைப்பற்றவில்லை என தெரிகிறது.

பல்சர் சுனி எழுதிய கடிதம் ஒன்று தற்போது கசிந்துள்ளது. மலையாள நட்சத்திரங்களின் பாலியல் மோசடி தொடர்புகள் குறித்து இந்த கடைதம் வெளிச்சம் போட்டு வருகிறது. பல்சர் சுனி எழுதிய கடிதத்தை ரிப்போர்ட்டர் டிவி கசிந்துள்ளது, மேலும் இந்த கடிதத்தில் திலீப்புக்கும் பாலியல் மோசடிக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக சுனி  குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த கடிதத்தில், பாலியல் ஆதாயத்திற்காக திலீப் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதாகவும் சுனி கூறி உள்ளார்.  மலையாள முன்னணி பிரபலங்கள் செக்ஸ் மாபியா குழுவின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

கொச்சியில் உள்ள அபாத் பிளாசா ஓட்டலில் நடந்த சதி கூட்டத்தில் நடிகர் சித்திக்குக்கும் தொடர்பு இருப்பதாகவும் பல்சர் சுனி அந்த கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.