தேசிய செய்திகள்

கொரோனா நிலவரம் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை + "||" + Prime Minister Narendra Modi starts a virtual meeting with CMs to review the COVID19 situation in their respective states

கொரோனா நிலவரம் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா நிலவரம் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன்  பிரதமர் மோடி  ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அதில், மாவட்ட அளவில் சுகாதார உள்கட்டமைப்பை உறுதி செய்யவும், 15 - 18 வயதினருக்கான தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்தவும் பிரதமர் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் தொற்று அதிகரிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில்,  முன்களப் பணியாளர்கள், முதியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவ உட்கட்டமைப்புகளை பலப்படுத்த முதல்-அமைச்சர்களிடம் பிரதமர் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகம், மராட்டியம், டெல்லி, குஜராத் மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, பன்சுக் மாண்டவியா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.