மாநில செய்திகள்

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் படையெடுப்பு + "||" + cmbt bus To the station The public Invasion

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் படையெடுப்பு

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் படையெடுப்பு
பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ஏராளமான பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
சென்னை,

தமிழர் திருநாளான பொங்கல் விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 நாட்களாக இயக்கப்பட்ட 16 ஆயிரம் பேருந்துகளில் 4 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை இன்று காலை முதல் அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக சென்னையில் 5 பேருந்து நிலையங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.