மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: 21 ஆயிரத்தை நெருங்கியது + "||" + Corona increasing jet speed in Tamil Nadu

தமிழகத்தில் ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: 21 ஆயிரத்தை நெருங்கியது

தமிழகத்தில் ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: 21 ஆயிரத்தை நெருங்கியது
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 17,934 இல் இருந்து 20,911 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

1,56,402 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 20,911 ஆக உள்ளது. சென்னையில் ஒரே நாளில் 8,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் 20,886 வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 25 பேர் என 20,911 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1-ம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது (ஜனவரி.13 தேதி) 20,911 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து மேலும் 6.235 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 27,27,960 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 89,959 இல் இருந்து 1,03,610 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,03,810 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் மேலும் 25 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,930 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 12 பேரும் தனியார் மருத்துவமனையில் 13 பேரும் உயிரிழந்தனர். 

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 241 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.