மாநில செய்திகள்

கொரோனா அலையை நிர்வகிப்பதில் மத்திய அரசுக்கு தமிழக அரசு துணை நிற்கும் - மு.க.ஸ்டாலின் + "||" + Tamil Nadu government will support the central government - MK Stalin

கொரோனா அலையை நிர்வகிப்பதில் மத்திய அரசுக்கு தமிழக அரசு துணை நிற்கும் - மு.க.ஸ்டாலின்

கொரோனா அலையை நிர்வகிப்பதில் மத்திய அரசுக்கு தமிழக அரசு துணை நிற்கும் -  மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் 64% பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் உடனான முதலமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடனான பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைக் கூட்டத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது,

 "கொரோனா தொற்று நோயின் ஒமைக்ரான் அலையை நிர்வகிக்க தமிழகம் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது. எனது அரசு பொறுப்பேற்ற பிறகு, தடுப்பூசி செலுத்துவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று வரை, தகுதியுள்ளவர்களில் 64% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

மேலும், 15 முதல் 18 வயது வரையிலான இளைஞர்களில் 74 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி போட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கும் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது.

கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்திட, மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தேவையான அனைத்து நகரங்களிலும் கொரோனா பராமரிப்பு மையங்களும் தொடங்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் தேசிய அளவில் வரையறுக்கப்பட்ட சோதனை விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மட்டுமே பயன்படுத்துப்படுகிறது. ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கை, ஆக்சிஜன் உற்பத்தி திறன், ஆக்சிஜன் சேமிப்பு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. 

கொரோனா பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளைக் கண்டிப்பாக அமல்படுத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் நான் அறிவுறுத்தியுள்ளேன். நிலைமையைச் சமாளிக்க அனைத்து அரசு இயந்திரமும் முழுமையாக தயார் நிலையில் உள்ளது. 

இந்த கொரோனா அலையை நிர்வகிப்பதில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழ்நாடு துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்' 

என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மரு.ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்புப் பணி அலுவலர் பி. செந்தில்குமார் இ.ஆ.ப., ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தினார்.
2. 391 பேருக்கு வேளாண்மைத்துறையில் பணி நியமன ஆணை மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வேளாண்மைத்துறையில் உதவி அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகிய பணி இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 391 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
3. ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு: மருத்துவ நிபுணர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழகத்தில் அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முடிவடைய உள்ள நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.
4. மழை வெள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மழை வெள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும் சட்டசபையில முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
5. இலங்கை சிறையில் இருக்கும் 56 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை சிறையில் இருந்து வரும் 56 தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.