தேசிய செய்திகள்

விரைவு ரெயில் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி; 20-க்கும் மேற்பட்டோர் காயம் + "||" + 3 deaths and 20 injured in the Guwahati-Bikaner Express derailment in Jalpaiguri, West Bengal: Indian Railways

விரைவு ரெயில் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி; 20-க்கும் மேற்பட்டோர் காயம்

விரைவு ரெயில் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி; 20-க்கும் மேற்பட்டோர் காயம்
மேற்கு வங்கத்தில் கவுகாத்தி- பிகேனிர் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தா,

ராஜஸ்தானிலிருந்து அசாம் நோக்கிச் சென்ற குவஹாட்டி - பிகானர் விரைவு ரெயில் மேற்கு வங்க மாநிலத்தின் தோமாஹானி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. 

தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள நிலையில், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக் குழுவினர் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.  ரெயில் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணிகளும் நடந்துவருகிறது. இதுவரை 20 -க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்``பிரதமர் மோடியுடன் பேசி, மீட்புப் பணிகள் குறித்து நிலமையை விவரித்துள்ளேன். விரைவான மீட்புப் பணிகளுக்கான நிலைமையை நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன்" என்று  டுவீட் செய்துள்ளார்.