தேசிய செய்திகள்

முதியவர்கள், குழந்தைகளுக்கு போட கூடிய சர்வதேச தடுப்பூசி கோவேக்சின்; பாரத் பயோடெக் + "||" + Covaxin, an international vaccine for the elderly and children; Bharat Biotech

முதியவர்கள், குழந்தைகளுக்கு போட கூடிய சர்வதேச தடுப்பூசி கோவேக்சின்; பாரத் பயோடெக்

முதியவர்கள், குழந்தைகளுக்கு போட கூடிய சர்வதேச தடுப்பூசி கோவேக்சின்; பாரத் பயோடெக்
கோவேக்சின் தடுப்பூசி முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு போட கூடிய சர்வதேச தடுப்பூசியாக உள்ளது என பாரத் பயோடெக் கூறியுள்ளது.


புதுடெல்லி,

நாட்டில் கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா பரவ தொடங்கியதும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.  எனினும், பரவல் குறையாத சூழலில், கடந்த 2021ம் ஆண்டு முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.

இதன்படி, கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இரு தடுப்பூசிகளுக்கு அவசரகால தேவைக்கான அனுமதியை அரசு வழங்கியது.  இதன்படி, 18 வயது கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.

இவற்றில், பாரத் பயோடக் நிறுவனம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் கோவேக்சின் தடுப்பூசியை, முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு செலுத்த கூடிய வகையில் உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி வெளியிடப்பட்ட செய்தியில், கொரோனாவுக்கு எதிரான சர்வதேச தடுப்பூசி தயாரிக்கும் எங்களுடைய இலக்குகள் எட்டப்பட்டு உள்ளன.  இதேபோன்று, உரிமம் பெறுவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.