தேசிய செய்திகள்

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,867 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + COVID-19 | Delhi reports 28,867 new cases

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,867 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,867 பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. டெல்லியிலும்  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் இன்று டெல்லி சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 28,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,46,583 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 29.21 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

டெல்லியில் இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,271 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 22,121 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,27,152 ஆக உயர்ந்துள்ளது. 

டெல்லியில் தற்போது 94,160 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் புதிதாக 21,259 பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கவலை வேண்டாம், ஊரடங்கு கிடையாது; டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 25 சதவீதத்தை தாண்டி அதிர வைத்துள்ளது.
3. டெல்லியில் தனியார் அலுவலகங்களை மூட உத்தரவு: ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தல்
டெல்லியில் தனியார் அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
4. டெல்லியில் கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்தது
டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 25 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
5. டெல்லியில் புதிதாக 22,751 பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,751 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.