தேசிய செய்திகள்

அசாம்-நாகலாந்து கவர்னர் ஜெகதீஷ் முக்கிக்கு கொரோனா பாதிப்பு...! + "||" + Assam Governor Jagdish Mukhi tests positive for COVID-19

அசாம்-நாகலாந்து கவர்னர் ஜெகதீஷ் முக்கிக்கு கொரோனா பாதிப்பு...!

அசாம்-நாகலாந்து கவர்னர் ஜெகதீஷ் முக்கிக்கு கொரோனா பாதிப்பு...!
அசாம்-நாகலாந்து கவர்னர் ஜெகதீஷ் முக்கிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அசாம்,

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.  

இதனிடையே கொரோனா பாதிப்பால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அசாம் மற்றும் நாகலாந்து கவர்னர் ஜெகதீஷ் முக்கிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஜெகதீஷ் முக்கி கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கவர்னர் மாளிகை தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. கவர்னரை தொடர்ந்து அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ராஜபவனில் தன்னை தனிமைப்படுத்திகொண்டுள்ளார்.

இதனிடையே கவர்னர் ஜெகதீஷ் முக்கி விரைவில் குணமடைய பிராத்திப்பதாக அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா வர்மா தெரிவித்துள்ளார்.