தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு + "||" + Death toll rises to 4 in rail derailment in West Bengal

மேற்கு வங்காளத்தில் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

மேற்கு வங்காளத்தில் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
மேற்கு வங்காளத்தில் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.


புதுடெல்லி,

ராஜஸ்தானிலிருந்து அசாம் நோக்கி சென்று கொண்டிருந்த கவுகாத்தி - பிகானிர் விரைவு ரெயில் மேற்கு வங்காள மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் தோமோஹானி பகுதியில் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.  இந்த விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.  20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறும்போது, மொத்தம் 12 ரெயில் பெட்டிகள் இந்த விபத்தில் சிக்கி தடம் புரண்டுள்ளன.  இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.  50 பேர் காயமடைந்து உள்ளனர்.

அவர்கள் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 2 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
கடலூரில் பூக்கள் விலை கிடுகிடு வென உயர்ந்தது.
2. மேற்கு வங்காளத்தில் கொரோனா உயர்வு; பிரதமருடன் பேச மம்தா பானர்ஜி முடிவு
மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ள சூழலில் பிரதமர் மோடியுடன் பேச மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.
3. டெல்லியில் கொரோனா உயர்வு; இரவுநேர ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் விதிக்கப்பட்ட இரவுநேர ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
4. அன்னவாசல் பகுதியில் தொடர் மழையால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
அன்னவாசல் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
5. புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ.106.98க்கு விற்பனை
புதுச்சேரியில் பெட்ரோல் விலை 34 காசுகள் உயர்ந்து ரூ.106.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.