தேசிய செய்திகள்

திருப்பதி விமான நிலையத்துக்கு தண்ணீர் வினியோகத்தை மாநில அரசு ரத்து செய்ததா? - மத்திய அரசு விசாரணை + "||" + Did the state government cancel the water supply to Tirupati Airport? - Federal Government Inquiry

திருப்பதி விமான நிலையத்துக்கு தண்ணீர் வினியோகத்தை மாநில அரசு ரத்து செய்ததா? - மத்திய அரசு விசாரணை

திருப்பதி விமான நிலையத்துக்கு தண்ணீர் வினியோகத்தை மாநில அரசு ரத்து செய்ததா? - மத்திய அரசு விசாரணை
திருப்பதி விமான நிலையத்துக்கு தண்ணீர் வினியோகத்தை மாநில அரசு ரத்து செய்ததா என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தியது.
புதுடெல்லி,

திருப்பதி விமான நிலையத்தில் நுழைய முயன்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் சிலரை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை என தெரிகிறது.

இதைத்தொடர்ந்து இந்த விமான நிலையம் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் குடியிருப்புகளுக்கு தண்ணீர் வினியோகத்தை திருப்பதி மாநகராட்சி ரத்துசெய்ததாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பா.ஜனதா எம்.பி. நரசிம்மராவ், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். மாநில ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.