தேசிய செய்திகள்

அரசியல் கட்சிகளின் செலவு விவரம் வெளியீடு + "||" + Publication of expenditure details of political parties

அரசியல் கட்சிகளின் செலவு விவரம் வெளியீடு

அரசியல் கட்சிகளின் செலவு விவரம் வெளியீடு
அரசியல் கட்சிகளின் செலவு விவரம் வெளியிட்டு தேர்தல் கமிஷனில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

2020-21-ம் நிதியாண்டில் செலவிட்ட தொகை குறித்த விவரங்கள் அடங்கிய தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையை தேர்தல் கமிஷனிடம் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்து உள்ளன. இவற்றை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.

இதில் முக்கியமாக தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க. ரூ.218 கோடி செலவழித்ததாக தெரிவித்து உள்ளது. இந்த கட்சி கடந்த ஆண்டில் மொத்தம் ரூ.149.95 கோடி நன்கொடையாக பெற்று உள்ளது.

இதைப்போல அ.தி.மு.க. ரூ.42.36 கோடி செலவிட்டிருப்பதாகவும், ரூ.34.07 கோடி நன்கொடை பெற்றதாகவும் அறிக்கை அளித்து இருக்கிறது. இதைப்போல மேலும் பல கட்சிகளின் வரவு-செலவு விவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது.