தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்ட்டர்; பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டு கொலை + "||" + Kashmir Encounter; Pakistani terrorist shot dead

காஷ்மீர் என்கவுண்ட்டர்; பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீர் என்கவுண்ட்டர்; பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டு கொலை
காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துடன் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதியை படையினர் என்கவுண்ட்டரில் சுட்டு கொன்றனர்.
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பரிவான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துடன் தொடர்புடைய பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட பயங்கரவாதியை சுட்டு கொன்றனர்.  பாபர் பாய் என்ற பெயரை கொண்ட அந்த பயங்கரகாதி கடந்த 2018ம் ஆண்டு முதல் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த என்கவுண்ட்டருக்கு முன்பு, குடிமக்களை பாதுகாப்புடன் வேறு பகுதிக்கு கொண்டு சென்றனர்.  இந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ் அதிகாரி ஒருவர், 3 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.  அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்

1. ரெயில் நிலைய கொள்ளை சம்பவம்; குப்பையில் பதுக்கிய ரூ.1.32 லட்சம்
சென்னை திருவான்மியூர் ரெயில் நிலைய கொள்ளை சம்பவத்தில் கிடைத்த ரூ.1.32 லட்சம் தொகையை குப்பையில் பதுக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2. சென்னை மாணவி தற்கொலை; கல்லூரி மாணவருக்கு ஜனவரி 3 வரை சிறை தண்டனை
சென்னை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவருக்கு ஜனவரி 3ந்தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
3. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜீப் பள்ளத்தில் பாய்ந்தது; 5 பேர் பலி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜீப் பள்ளத்தில் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. மத்திய சூடானில் விபத்து; 8 பேர் உயிரிழப்பு
மத்திய சூடானில் ஏற்பட்ட போக்குவரத்து விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
5. கர்நாடகாவில் கார் விபத்து: ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் கார் விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.