உலக செய்திகள்

ஜெர்மனியில் கொரோனா புதிய உச்சம்; 81,417 பேருக்கு பாதிப்பு + "||" + Corona new peak in Germany; 81,417 people were affected

ஜெர்மனியில் கொரோனா புதிய உச்சம்; 81,417 பேருக்கு பாதிப்பு

ஜெர்மனியில் கொரோனா புதிய உச்சம்; 81,417 பேருக்கு பாதிப்பு
ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகள் புதிய உச்சம் தொட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

பெர்லின்,



ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.  இதேபோன்று, ஒமைக்ரான் பாதிப்புகளும் உயர்ந்து வருகின்றன.  இதுபற்றி தொற்று நோய்களுக்கான ராபர்ட் கோச் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜெர்மனியில் தினசரி கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் அடைந்து உள்ளது.  இதன்படி, 81,417 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவாகி இருந்த எண்ணிக்கையை விட 17 ஆயிரம் கூடுதல் ஆகும்.  7 நாள் பாதிப்பு விகிதம் 1 லட்சம் பேருக்கு 427.7 என்ற அளவில் நேற்று (வியாழ கிழமை) உயர்ந்து உள்ளது.  இது ஒரு வாரத்திற்கு முன்பு 285.9 ஆக இருந்தது என தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, தடுப்பூசி போடுவது அதிகரிக்கப்பட வேண்டும் என மத்திய சுகாதார மந்திரி கார்ல் கேட்டு கொண்டார்.




தொடர்புடைய செய்திகள்

1. 26 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா: நெல்லையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்தது
தமிழகத்தில் 26 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் நெல்லையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்துள்ளது.
2. தமிழகத்தில் பாதிப்பு சற்றே குறைந்தது; 30,580 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் பாதிப்பு சற்றே குறைந்துள்ளது. 30 ஆயிரத்து 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. 28 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தமிழகத்தில் 905 குழந்தைகள் பாதிப்பு
தமிழகத்தில் நேற்று 905 குழந்தைகள் உட்பட 28 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. பொது போக்குவரத்து பாதிப்பு; கலெக்டரை கடிந்து கொண்ட முதல்-மந்திரி
ஆம்புலன்ஸ் உள்பட வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதற்காக கலெக்டரை அசாம் முதல்-மந்திரி கடிந்து கொண்டார்.
5. அர்ஜென்டினாவில் உச்சம் அடைந்த கொரோனா; 1,39,853 பேருக்கு பாதிப்பு
அர்ஜென்டினாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,39,853 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.