மாநில செய்திகள்

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு + "||" + It will rain for the first four days in the coastal districts of Tamil Nadu today

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும்.
சென்னை,


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும்.  கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் வரும்.  16, 17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யும்.  மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதிகபட்சம் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், உசிலம்பட்டி, வெள்ளகோவிலில், 3 செ.மீ., பேரையூர் மற்றும் மதுக்கூரில், 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மீனவர்கள் வழக்கம்போல கடலுக்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
2. சென்னையில் மீண்டும் மழை குளிர்ந்த காற்றுடன் இதமான வானிலை நிலவியது
சென்னையில் நேற்று மீண்டும் மழை பெய்தது. குளிர்ந்த காற்றுடன் ரம்மியமான வானிலை நிலவியது.
3. சென்னையில் திடீரென பெய்த மழை
சென்னையில் இன்று காலை திடீரென பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.
4. ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்: மழையால் நான்காம் நாள் ஆட்டம் தாமதம்..!
இந்திய - தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
5. விழுப்புரம் அருகே கொட்டும் மழையில் விவசாயிகள் சாலை மறியல்
அதிகளவில் கரும்புகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விழுப்புரம் அருகே கொட்டும் மழையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.