தேசிய செய்திகள்

நடிகர் திலீப்பை வரும் 18 ஆம் தேதி வரை கைது செய்ய கோர்ட் தடை + "||" + Kerala High Court restrains police from arresting actor Dileep till Tuesday (January 18) for allegedly threatening officials probing 'actress assault case'

நடிகர் திலீப்பை வரும் 18 ஆம் தேதி வரை கைது செய்ய கோர்ட் தடை

நடிகர் திலீப்பை வரும் 18 ஆம் தேதி வரை கைது செய்ய கோர்ட் தடை
கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வழக்கு விசாரணை 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூடுபிடித்துள்ளது.
திருவனந்தபுரம், 


கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வழக்கு விசாரணை 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூடுபிடித்துள்ளது. பிரபல இயக்குனர் பாலசந்திரகுமார் நடிகர் திலீப்புக்கு எதிராக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணையை மேற்கொண்டு வரும் அதிகாரியை லாரியை ஏற்றி கொல்ல திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார். 

அதே சமயத்தில் நடிகை கடத்தப்படும் சம்பவம் திலீப் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கும், நடிகர் திலீப்பின் சகோதரர் அனூப்பிற்கும் நன்றாக தெரியும் எனவும், மேலும் வழக்கு விசாரணையில் இருந்து டி.ஜி.பி. சந்தியாவை மாற்றக்கோரி நடிகர் திலீப்பின் வீட்டிற்கு நேரில் சென்ற வி.ஐ.பி. ஒருவர், மந்திரியிடம் போனில் பேசியதாகவும் கூறியுள்ளார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இனி நாம் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என அந்த வி.ஐ.பி. நடிகர் திலீப்பிடம் கூறியதாகவும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குமூலம் தான் தற்போது கேரளாவில் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே விசாரணை அதிகாரியை கொல்ல சதிதிட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் உள்பட 6 பேர் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர். 

இதனால் நடிகர் திலீப் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நடிகர் திலீப் சார்பில் கோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டது. பின்னர் நடிகர் திலீப்பை இன்று (வெள்ளிக்கிழமை) வரை கைது செய்யக்கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனிடையே, வரும் 18 ஆம் தேதி வரை நடிகர் திலீப்பை கைது செய்ய போலீசாருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மலையாள நடிகர் திலீப்பிற்கு எதிராக பிரபல இயக்குனர் வாக்குமூலம்
நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர் திலீப்பிற்கு எதிராக பிரபல இயக்குனர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், நடிகையின் அலறல் வீடியோ காட்சியை திலீப் ரசித்ததாக தெரிவித்துள்ளார்.