மாநில செய்திகள்

உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் வீட்டு தனிமை கூடாது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் + "||" + Home isolation should not be done without proper medical examination - Health Secretary Radhakrishnan

உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் வீட்டு தனிமை கூடாது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் வீட்டு தனிமை கூடாது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் கேர் சென்டரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
சென்னை, 

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநில மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 

இதுதொடர்பான அந்த சுற்றறிக்கையில், “உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் கொரோனா பாதித்தவரை வீட்டு தனிமைக்கு அனுமதிக்கக் கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் கேர் சென்டரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த அலையில் இறப்பை பெருமளவில் குறைக்க வேண்டும். யாரை பரிசோதிக்க வேண்டும், யாரை பரிசோதிக்க வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர். கொடுத்துள்ள வழிகாட்டுதல்களை முறையாகக் கடைபிடிக்க வேண்டும். (அறிகுறி இல்லையென்றால் பரிசோதிக்க வேண்டாம்). தொற்று உறுதியாகும் நபர்கள் தொடர்புடைய இடங்களில் கூடுதல் கவனம் தேவை” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.