கிரிக்கெட்

கேப்டவுன் டெஸ்ட்: உணவு இடைவேளை வரை தென்ஆப்பிரிக்கா அணி 171/3 + "||" + Cape Town Test: South Africa 171/3 until lunch break

கேப்டவுன் டெஸ்ட்: உணவு இடைவேளை வரை தென்ஆப்பிரிக்கா அணி 171/3

கேப்டவுன் டெஸ்ட்: உணவு இடைவேளை வரை தென்ஆப்பிரிக்கா அணி 171/3
தென் ஆப்ரிக்கா அணியில் அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டவுன்,

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 77.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் காஜிசோ ரபடா 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி 76.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளை அள்ளினார். 

இதையடுத்து 13 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 17 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 3 வது நாள் ஆட்டத்தில் 67.3 ஓவர்கள் முடிவில் 198 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி ஆல் அவுட்டானது. இதையடுத்து 212 ரன்கள் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா பேட்டிங்கை தொடங்கியது.  பின்னர் 3-ம் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 29 ஓவர்களில் 101 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

வெற்றி பெற 111 ரன்கள் தேவைப்பட்டநிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் களமிறங்கிய  பீட்டர்சன் , ரசிவன் டெர் டூசன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் அணியின் ரன்ரேட் உயர்ந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பீட்டர்சன் 82 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து டூசனுடன்(22 ரன்கள்), பவுமா (12 ரன்கள்)  களமிறங்கி விளையாடி வருகிறார். 

தற்போது தென் ஆப்பிரிக்கா அணி 55 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்திய அணியின் சார்பில் பும்ரா, ஷமி மற்றும் தாக்கூர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற இன்னும் 41 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. உணவு இடைவேளைக்குப் பிறகு வெற்றி கனியை பறிக்கும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்க உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேப்டவுன் டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 101/2
தென் ஆப்ரிக்கா அணியில் அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
2. கேப்டவுன் டெஸ்ட்: இரண்டாவதுநாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 57/2
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவதுநாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்துள்ளது.
3. கேப்டவுன் டெஸ்ட்: முதல்நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 17/1
தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தனது முதல் இன்னிங்சில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.