உலக செய்திகள்

'கால்களை மூடுங்கள், புத்தகத்தை விரியுங்கள்' மாணவிகளிடையே தென் ஆப்பிரிக்க மந்திரி சர்ச்சை பேச்சு + "||" + South African minister slammed for telling girls to ‘open books and close legs’ in bid to reduce teen pregnancy

'கால்களை மூடுங்கள், புத்தகத்தை விரியுங்கள்' மாணவிகளிடையே தென் ஆப்பிரிக்க மந்திரி சர்ச்சை பேச்சு

'கால்களை மூடுங்கள், புத்தகத்தை விரியுங்கள்'  மாணவிகளிடையே தென் ஆப்பிரிக்க மந்திரி சர்ச்சை பேச்சு
'கால்களை மூடுங்கள், புத்தகத்தை விரியுங்கள்' மாணவிகளிடையே தென் ஆப்பிரிக்க பெண் மந்திரி சர்ச்சை பேச்சு
கேப்டவுன்

தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தின் பெண்  சுகாதார மந்திரி போபி ரமதுபா  பள்ளி  நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

பெண் குழந்தைகளுக்கு நான் சொல்வது இது தான்: உங்கள் புத்தகத்தை விரியுங்கள், உங்கள் கால்களை மூடுங்கள். உங்கள் கால்களை விரிக்காதீர்கள், புத்தகத்தை விரியுங்கள். 

பெண்கள் வயதான ஆண்களால் விலை உயர்ந்த விக்குகள், ஸ்மார்ட்போன்கள் போன்ற பொருட்களால் ஆசைகாட்டி கவரப்படுகிறார்கள்  என கூறினார்.

இவரது பேச்சு குறித்த வீடியோ  சமூக வலைதளத்தில் வைரலானது இதை தொடர்ந்து அவருக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்  

போபி ரமதுபாவின் கருத்து பிரச்சினைக்குரியது என எதிர்கட்சியைச் சேர்ந்த சிவிவே குவாருபே கூறினார்.

"பள்ளி மானவர்களிடம் பாலுறவுக்கு முன் அனுமதி பெறுவது குறித்து அர்த்தமுள்ள ஒரு விவாதத்தை மேற்கொண்டிருக்கலாம்... அதற்கு பதிலாக நீங்கள் பாதிக்கப்பட்டவர்களையே குறை கூறுகிறீர்கள். பெண்கள் மீது தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கிறீர்கள்." என டுவிட்டர் சமூக தளத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், தான் ஆண்களையும் குறிப்பிட்டுத் தான் அக்கருத்தைக் கூறியதாகவும் போபி ரமதுபா தற்போது விளக்கம் அளித்து உள்ளார். 

"பெண்களோடு பாலுறவு கொள்ள வேண்டாம், கல்வியில் கவனம் செலுத்துங்கள் என ஆண்களுக்கும்தான் கூறினேன்" என்றார் ரமதுபா. மேலும் தன் தொகுதியான லிம்போபோவின் வாக்காளர்கள் இக்கருத்தை பாராட்டியதாகவும் கூறினார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் கிட்டத்தட்ட 33,400 பெண்கள் 17 வயதுக்குள் குழந்தையைப் பெற்றெடுத்ததாக அரசு  புள்ளிவிவரம் கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கேப்டவுன் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்
13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
2. சத்தீஸ்கர்: சுகாதார மந்திரிக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி..!
சத்திஸ்கர் மாநில சுகாதார மந்திரியான சிங் தியோவுக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு உத்தரவு திடீர் ரத்து..!
ஒமைக்ரான் வைரஸ் உச்சம் தொட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்க உத்தரவு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
4. தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த 3 பேருக்கு கொரோனா- ஒமைக்ரான் பாதிப்பா?
கடலூர் : தென் ஆப்ரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
5. தென்னாப்பிரிக்கா - இந்தியா கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.