மாநில செய்திகள்

தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களிடம் அத்து மீறிய முன்னாள் ராணுவ வீரர் கைது + "||" + Ex-serviceman arrested for abusing women in private apartment

தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களிடம் அத்து மீறிய முன்னாள் ராணுவ வீரர் கைது

தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களிடம் அத்து மீறிய முன்னாள் ராணுவ வீரர் கைது
புது வண்ணாரப்பேட்டையில் தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் பெண்களிடம் அத்து மீறிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யபட்டார்.
திருவொற்றியூர்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பிரின்ஸ் அப்பார்ட்மென்டை சேர்ந்தவர் சேகர் (62). இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். மேலும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறார். இந்நிலையில் சேகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தொடர்ந்து அத்துமீறும் செயலில் ஈடுபட்டு வருவதாக புதுவண்ணாரப்பேட்டை ஆய்வாளர் பீர்பாஷாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் குடியிருப்பில் இருந்த பெண்களிடம் சேகர் தொடர்ந்து அத்துமீறி வந்ததும், மேலும் அவர் குடியிருப்பு சங்கத்தின் முக்கிய பிரதிநிதியாக இருந்து வந்ததால் பெண்கள் யாரும் புகார் அளிக்காமல் அச்சத்தில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

உடனடியாக சேகரை கைது செய்த போலீசார் அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குபதிவு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.