சினிமா செய்திகள்

ஜெயலலிதா வேடத்தில் ஐஸ்வர்யா ராய் ; இருவர் படம் வெளியாகி 25 ஆண்டு நிறைவு + "||" + When J Jayalalithaa said Aishwarya Rai would be perfect choice to play her on screen

ஜெயலலிதா வேடத்தில் ஐஸ்வர்யா ராய் ; இருவர் படம் வெளியாகி 25 ஆண்டு நிறைவு

ஜெயலலிதா வேடத்தில் ஐஸ்வர்யா ராய் ; இருவர் படம் வெளியாகி 25 ஆண்டு நிறைவு
இருவர் படம் இன்றும் ஜனவரி 14 அன்று தனது 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்தப் படம் ஐஸ்வர்யாவின் சினிமா தொழில் வாழ்கைக்கு வழி வகுத்தது.
சென்னை

ஐஸ்வர்யா ராய் 1997 இல் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மணிரத்னம் இயக்கத்தில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், இருவர் வெளியானவுடன் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.  2012 இல் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிட்யூட் தயாரித்த 1000 சிறந்த படங்களில் இடம்பெற்றது.

தமிழ்நாட்டின் மறைந்த மூன்று முன்னாள்  முதல்-அமைச்சர்கள், எம்.ஜி.ஆர், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை, அரசியல் காட்சிகள் இதில் இடம்பெற்று இருந்தன.

இருவர் படம் இன்றுடன்  ஜனவரி 14 அன்று தனது 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்தப் படம் ஐஸ்வர்யாவின் சினிமா தொழில் வாழ்கைக்கு வழி வகுத்தது, இந்த படம் பல மொழிகளில்  எடுக்கப்பட்டது. மேலும் ஹாலிவுட்டில் கூட ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.ஆங்கிலத்தில் ‘The Duo’ என்று மொழிபெயர்க்கப்பட்ட இருவர், மோகன்லால் (அவரது தமிழ் அறிமுகத்தில்), பிரகாஷ் ராஜ், கவுதமி, ரேவதி மற்றும் தபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இருவரில் ஐஸ்வர்யாவின் கதாபாத்திரம் ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டது. பிரபல பத்திரிகையாளர் சிமி கரேவால் உடனான ஒரு பேட்டியின் போது  ஜெயலலிதா எனது சிறு வயதில் என்வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் மிகவும் பொருத்தமானவர் என்று நினைக்கிறேன் என கூறி இருந்தார்.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் மூலம் மணிரத்னத்திற்கு ஐஸ்வர்யா அறிமுகமானார். இதுகுறித்து  ஐஸ்வர்யா ராய் முந்தைய பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

 "நான் ராஜீவுடன் பல விளம்பரப் படங்களில் பணிபுரிந்தேன், ஒரு படப்பிடிப்பின் போது, அவர் ரோஜாவின் இசையைப் பகிர்ந்து கொண்டார்.இருவர் படத்திற்கு முன்பே  நான் மணிரத்தினத்தின் படைப்புகளை  ரசித்தேன். நான் எவ்வளவு பெரிய ரசிகை என்று அவருக்கு (ராஜீவ்) தெரியும். மேலும் ஒரு படத்திற்காக என்னை அணுகுவதாக அவர் என்னிடம் சொன்னபோது, அவர் என்னை கிண்டல் செய்கிறார் என்று நினைத்தேன்.

நான் மணிரத்தினம்  அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, அவர் இருவரைப் பற்றிய சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.  அப்போது அவர் சொல்வதைக் கேட்பது ஒரு ஆசிரியரின் முன் அமர்ந்திருப்பது போல் இருந்தது; ஒரு நடிகையாக  என் வேலையைத் தொடங்க இது சரியான இடம் என்று எனக்குத் தெரியும். எனக்கு முந்தைய பயிற்சி எதுவும் இல்லை. என் குடும்பத்தில் யாருக்கும் திரைத்துறையில் தொடர்பு இல்லை. 

மணிரத்னம்  ஆரம்பத்தில் என் மீது நம்பிக்கை வைத்து இருவர் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தது எனது நம்பிக்கைக்கும், ஆர்வத்துக்கும் பெரிதும் உதவியது என கூறி இருந்தார்.

தற்போது ஐஸ்வர்யா முன்பு போல் அதிக சினிமாவில் நடிக்கவில்லை. மணிரத்னத்தின் குரு, ராவணன் படங்களிலும் நடித்துள்ளார். மணிரத்னத்தின் இரண்டு பகுதி வரலாற்றுக் காவியமான பொன்னின் செல்வன் படத்தில்  நடித்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஷங்கரின் மகளை பாராட்டிய ரோபோ சங்கரின் மகள்..! " வாழ்த்துகள் அக்கா... லவ் யூ ஸோ மச் தேனு..."
டைரக்டர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் முத்தையாவின் விருமன் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.
2. சமந்தாவை பிரியும் முடிவு ...! இருவரின் நலன் கருதியே...!- நாக சைதன்யா
சமந்தாவை பிரியும் முடிவு பரஸ்பர நலன் கருதியே எடுக்கப்பட்ட முடிவு என நடிகர் நாக சைதன்யா கூறினார்
3. தமிழ் சினிமா எப்போதுமே திறமையான நடிகர்களுக்கு உரிய அங்கீகாரம் தரும் - நடிகை ஆஷா சரத்
தமிழ் சினிமா எப்போதுமே திறமையான நடிகர்களுக்கு உரிய அங்கீகாரம் தரும் மையமாக உள்ளது என நடிகை ஆஷா சரத் கூறினார்.
4. கொரோனாவால் முடங்கிய வலிமை தயாரிப்பாளர் குடும்பம் ... ! மீண்டது... !
போனி கபூரின் இளைய மகள் குஷி கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, போனி கபூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
5. வடையில் பிளாஸ்டிக் ; தொண்டையில் சிக்கி கொண்டது - நடிகை பரபரப்பு புகார்
ஆன்லைன் மூலம் வாங்கிய வடையில் பிளாஸ்டிக் இருந்தது அது என் தொண்டயில் சிக்கி கொண்டது என நடிகை ஒருவர் புகார் கூறி உள்ளார்.