கிரிக்கெட்

டிஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு; ‘ஸ்டெம்ப் மைக்’கில் பதிவான இந்திய வீரர்களின் உரையாடல்கள் + "||" + Focus on your team, not just opposition: Kohli after Elgar reprieve due to contentious DRS

டிஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு; ‘ஸ்டெம்ப் மைக்’கில் பதிவான இந்திய வீரர்களின் உரையாடல்கள்

டிஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு; ‘ஸ்டெம்ப் மைக்’கில் பதிவான இந்திய வீரர்களின் உரையாடல்கள்
உங்கள் அணியில் கவனம் செலுத்துங்கள், எதிரணியின் மீது அல்ல என்று விராட் கோலி மிகக்கடுமையாக சாடியுள்ளார்.
கேப்டவுன்,

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 212- ரன்கள் நிர்ணையிக்கப்பட்டது. 212 ரன்கள் இலக்குடன் பேட் செய்யும் தென் ஆப்பிரிக்கா சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தி வெற்றியை நெருங்கி விட்டது. 

முன்னதாக, நேற்று 212- ரன்கள் இலக்குடன் தனது 2-வது இன்னிங்சை தென் ஆப்பிரிக்க அணி துவங்கியது. தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர்  அஸ்வின் வீசிய பந்தில் எல்.பி. டபிள்யூ ஆனார். நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ் முறையில் எல்கர் மேல் முறையீடு செய்தார். 

இதை டிவி ஸ்க்ரீனில் பார்த்த நடுவர்கள் பந்து ஸ்டெம்புக்கு மேலே செல்லும் என்று கூறி அவுட் வழங்கியதை ரத்து செய்தனர். ஆனால், எல்கர்  பேடில்  வாங்கியது தெளிவாகத் தெரிந்தது, அவுட் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், டிஆர்எஸ் முறையில் ரத்தானது இந்திய வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் கே.எல் ராகுல், மூத்த வீரர் அஸ்வின் ஆகியோர்  ஸ்டெம்பில் உள்ள மைக் அருகே சென்று பேசியது தெளிவாக பதிவாகியுள்ளது. கே.எல் ராகுல் பேசுகையில், “  “11 வீரர்களுக்கு எதிராக ஒரு நாடே விளையாடுகிறது” என்றார். 

அஸ்வின் கூறுகையில் “ சூப்பர்ஸ்போர்ட் நிறுவனம் தென் ஆப்பிரி்க்க அணி வெற்றி பெறுவதற்கு வேறு ஏதாவது சிறந்தவழி இருக்கிறதா எனப் பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.


கேப்டன் கோலி ஸ்டெம்ப் மைக் அருகே சென்று “ உங்கள் அணியில் கவனம் செலுத்துங்கள், எதிரணியின் மீது அல்ல. எல்லா நேரமும் எங்களை பின்தொடர முயற்சிக்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீரர்கள் முன்னேற்றம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
2. உலக குத்துச்சண்டை: முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர்.
3. கடின உழைப்பும்,அனைவரின் ஆதரவுமே நான் தங்கம் வெல்ல காரணம் - நீரஜ் சோப்ரா
கடின உழைப்பாலேயே ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதாக ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
4. ஒலிம்பிக் மல்யுத்தம்: பஜ்ரங் பூனியா வெண்கலப் பதக்கம் வென்றார்
ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவு போட்டி; இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெண்கலப் பதக்கம் வென்றார்
5. டோக்கியோ ஒலிம்பிக் இன்றுடன் இந்தியாவிற்கான போட்டிகள் நிறைவடைய உள்ளது
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா மல்யுத்தம்,ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.