தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா பாதிப்பு உயர்கிறது; ஆனாலும் அச்சம் வேண்டாம்; கெஜ்ரிவால் ஆறுதல் + "||" + Delhi COVID-19 cases rising fast but hospitalisation and deaths low: Kejriwal

டெல்லியில் கொரோனா பாதிப்பு உயர்கிறது; ஆனாலும் அச்சம் வேண்டாம்; கெஜ்ரிவால் ஆறுதல்

டெல்லியில் கொரோனா பாதிப்பு உயர்கிறது; ஆனாலும் அச்சம் வேண்டாம்;  கெஜ்ரிவால் ஆறுதல்
கொரோனாவை எதிர்கொள்ள டெல்லி முழு வீச்சில் தயாராக உள்ளது. படுக்கைகளுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் மிகக் குறைவாகவே உள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது; - “ அச்சப்பட வேண்டியதில்லை. கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வந்தாலும், இதில் இருவேறு வழிகள் கிடையாது. ஒமைக்ரான் திரிபு கொரோனா மிகவும் வேகமாக பரவி தொற்றை ஏற்படுத்தக்கூடியது. 

தொற்று பாதிப்பு விகிதம் 29 சதவீதத்தை கடந்தாலும் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.  கொரோனாவை எதிர்கொள்ள டெல்லி முழு வீச்சில் தயாராக உள்ளது. படுக்கைகளுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 1,471 பேருக்கு தொற்று
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதிப்பு 55 சதவீதம் அதிகரிப்பு
உலக அளவில் கொரோனா பாதிப்பு 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
3. டெல்லியில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 26.22 % ஆக உயர்வு
டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
4. கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
கேரளாவில் 3 மாதங்களுக்குப் பிறகு தொற்று பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
5. இங்கிலாந்தில் புதிதாக 1,20,821 பேருக்கு கொரோனா பாதிப்பு...!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,20,821 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.