மாநில செய்திகள்

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா: 23 ஆயிரத்தை தாண்டிய தினசரி தொற்று பாதிப்பு + "||" + Increasing corona in Tamil Nadu: daily incidence of infections exceeding 23 thousand

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா: 23 ஆயிரத்தை தாண்டிய தினசரி தொற்று பாதிப்பு

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா: 23 ஆயிரத்தை தாண்டிய தினசரி தொற்று பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 28,91,959 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 27,36,986 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 9,026 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 26 பேர் (அரசு மருத்துவமனை - 15, தனியார் மருத்துவமனை - 11) உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,956 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று மேலும் 8,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,92,64,199 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,53,046 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தற்போது 1,18,017 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,338- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் கொரோனா பாதிப்பு உயர்கிறது; ஆனாலும் அச்சம் வேண்டாம்; கெஜ்ரிவால் ஆறுதல்
கொரோனாவை எதிர்கொள்ள டெல்லி முழு வீச்சில் தயாராக உள்ளது. படுக்கைகளுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
3. புதுச்சேரியில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 1,471 பேருக்கு தொற்று
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதிப்பு 55 சதவீதம் அதிகரிப்பு
உலக அளவில் கொரோனா பாதிப்பு 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
5. டெல்லியில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 26.22 % ஆக உயர்வு
டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.