தேசிய செய்திகள்

டெல்லியில் புதிதாக 24,383 பேருக்கு கொரோனா பாதிப்பு..! + "||" + Delhi records 24,383 new Covid-19 cases, positivity rate rises to 30.64 per cent

டெல்லியில் புதிதாக 24,383 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

டெல்லியில் புதிதாக 24,383 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. டெல்லியிலும்  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று டெல்லி சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 24,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,70,966 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 30.64 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

டெல்லியில் இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 34 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,305 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26,236 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,53,388 ஆக உயர்ந்துள்ளது. 

டெல்லியில் தற்போது 92,273 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 5,760 பேருக்கு தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,760 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 9,197 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 9,197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் இன்று 11,486 பேருக்கு கொரோனா
டெல்லியில் தற்போது 58,593 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. டெல்லியில் இன்று 10,756 பேருக்கு கொரோனா
டெல்லியில் தற்போது 61,954 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5. டெல்லியில் இன்று 12,306 பேருக்கு கொரோனா
டெல்லியில் தற்போது 68,730 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.