பட்ஜெட்

பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்..! + "||" + Budget Session of Parliament to begin on Jan 31; Union budget on Feb 1

பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்..!

பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்..!
2022-2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
புதுடெல்லி, 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து 2022-23ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31-ந்தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது.

இதன்படி ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  5 மாநில சட்டமன்றத் தேர்தல் வருவதால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வானது ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல் இரண்டாவது அமர்வு கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் 2022-23 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ந்தேதி நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார். இதனிடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜனவரி 31-ம் தேதி, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலம் முழுவதும் ஏரி, குளங்களில் 4,862 அரசு கட்டிடங்கள் ஐகோர்ட்டில் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல்
மாநிலம் முழுவதும் எரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் 4,862 அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று சென்னை ஐகோர்ட்டில் தலைமைச் செயலாளர் இறையன்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
2. கருணாநிதி குறித்து சர்ச்சை கருத்து: வைகோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
கருணாநிதி குறித்து சர்ச்சை கருத்து: வைகோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - சென்னை சிறப்பு கோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு.
3. கைதிகள் தயாரிக்கும் பொருட்களில் ரூ.100 கோடி ஊழல்
கைதிகள் தயாரிக்கும் பொருட்களில் ரூ.100 கோடி ஊழல் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்.
4. சென்னை துறைமுக பொறுப்புக்கழக வைப்புத்தொகை ரூ.45 கோடி மோசடி: வங்கி மேலாளர் உள்பட 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை துறைமுக பொறுப்புக்கழக வைப்புத்தொகை ரூ.45 கோடியை முறைகேடு செய்த வழக்கில் வங்கி மேலாளர் உள்பட 18 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
5. டாக்டர் கனிமொழி, ராஜேஷ்குமார் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான 2 காலியிடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் டாக்டர் கனிமொழி மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.