தேசிய செய்திகள்

மும்பையில் கொரோனா பாதிப்பு 17 சதவிகிதம் குறைந்தது + "||" + 11,317 New Covid Cases In Mumbai Today, 17% Lower Than Yesterday

மும்பையில் கொரோனா பாதிப்பு 17 சதவிகிதம் குறைந்தது

மும்பையில் கொரோனா பாதிப்பு 17 சதவிகிதம் குறைந்தது
நாட்டின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் பிற நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது.
மும்பை,

மராட்டிய தலைநகர் மும்பையில் கொரோனா தொற்று பரவல் தற்போது குறையத்தொடங்கியிருக்கிறது. தொற்று பாதிப்பு நேற்றை விட இன்று 17 சதவிகிதம் சரிந்து 11,317- ஆக  பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு  9 பேர் பலியாகியுள்ளனர். மும்பையில் நேற்று பாதித்தவர்களில் 88 சதவீதம் பேர் எந்த வித அறிகுறிகளும் இல்லாதவர்கள். 

தொற்று பாதிப்பு குறைவாக பதிவாகியிருக்கும் அதேவேளையில், பரிசோதனைகளும் நேற்றை விட 13 சதவிகிதம் குறைந்துள்ளது. மும்பையில் நேற்று பரிசோதனை 54,924- ஆக இருந்தது. நேற்று கொரோனா பாதிப்பு 13,702- ஆக பதிவாகி இருந்தது.  தொற்று பாதிப்புக்கு 6 பேர் பலியாகினர்.  

நாட்டின் நிதி தலநகரம் என்று அழைக்கப்படும்  மும்பையில் தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் பிற நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது. டெல்லியில் தொற்று பாதிபு விகிதம் 30 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 2- வது நாளாக கொரோனா பாதிப்பு குறைவு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 532- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று குறைவு
இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 15.88 சதவிகிதமாக உள்ளது.
3. இத்தாலியில் புதிதாக 1,55,697 பேருக்கு கொரோனா பாதிப்பு
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,55,697 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ரஷ்யாவில் புதிதாக 88,816 பேருக்கு கொரோனா: மேலும் 665 பேர் பலி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 88,816 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடகாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவு....!
கர்நாடகாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.