தேசிய செய்திகள்

ஒரே ஓடுபாதையில் மோதுவது போல் சென்ற 2 விமானங்கள்..! பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு + "||" + India-bound flights come close to collision in Dubai; DGCA seeks report copy from UAE

ஒரே ஓடுபாதையில் மோதுவது போல் சென்ற 2 விமானங்கள்..! பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

ஒரே  ஓடுபாதையில் மோதுவது போல் சென்ற  2 விமானங்கள்..! பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
துபாய் சர்வதேச விமான நிலையத்தில், இந்தியா புறப்பட இருந்த இரு விமானங்களும் ஒரே ஓடுபாதையில் மோதுவது போல் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துபாய்,

துபாய் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு விமானங்கள் இந்தியாவில் உள்ள ஐதரபாத் மற்றும் மும்பைக்கு  புறப்பட தயாராக இருந்துள்ளன. 5 நிமிட இடைவெளியில் புறப்பட இருந்த இரண்டு விமானங்களுக்கும் ஒரே ஓடு பாதை ஒதுக்கப்பட்டிருந்துள்ளது. 

விமானத்தின் பயணங்கள் புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு ஒரே ஓடுபாதையில் இரண்டு விமானங்களும் செல்ல இருந்ததை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்து, உடனடியாக ஒரு விமானத்தின் பயணத்தை நிறுத்துமாறு விமான ஓட்டிக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, பெங்களூரு செல்லும் எமிரேட்ஸ் விமானம் முதலில் டேக் ஆப் ஆகி புறப்பட்டு சென்றுள்ளது.  

ஐதராபாத் செல்லும் விமானத்தை நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக  விமானி விமானத்தை பத்திரமாக நிறுத்தியுள்ளார்.  உரிய நேரத்தில் தவறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கையின் நகலை அளிக்குமாறு துபாய் விமான போக்குவரத்து அமைச்சகத்தை இந்திய விமானக் கட்டுப்பாட்டு ஒழுங்கு முறை ஆணையம் (டிஜிசிஏ) அறிவுறுத்தியுள்ளது.  முதல் கட்ட விசாரணையில் ஐதராபாத் செல்ல இருந்த விமானத்திற்கு ஏடிசி எனப்படும் விமான கட்டுப்பாட்டு அமைப்பு, புறப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. துபாய் விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு; ஓடுபாதை 2 மணி நேரம் மூடப்பட்டது
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த ஓடுபாதை 2 மணி நேரம் மூடப்பட்டது.