தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 136 போலீருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Corona exposure confirmed for 136 policemen in Marathaland

மராட்டியத்தில் 136 போலீருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மராட்டியத்தில் 136 போலீருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் ஒரே நாளில் 136 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 43 ஆயிரத்து 211 பேருக்கு புதிதாக இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 33 ஆயிரத்து 356 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 67 லட்சத்து 17 ஆயிரத்து 125 ஆக அதிகரித்துள்ளது.

2 லட்சத்து 61 ஆயிரத்து 658 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 756 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 136 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.   1,253 போலீசார் சிகிச்சையில் உள்ளனர்.  இதுவரை கொரோனாவுக்கு 126 போலீசார் உயிரிழந்து உள்ளனர் என மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு நிலவரம்: தமிழகம் உள்பட தென் மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை
தென் மாநிலங்களில் கொரோனா நிலவரம், பொது சுகாதாரத்துறையின் தயார் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36.64 -கோடியாக உயர்வு
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7.14 கோடியாக உள்ளது.
3. தமிழகத்தில் பரிசோதனை 6 கோடியை கடந்தது; 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளது. 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் 2,356 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் காரணமாக தமிழகத்தில் 2,356 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் ஒரே நாளில் 3.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.