தேசிய செய்திகள்

மகர சங்கராந்தி விழா: கங்கை நதியில் 3.5 லட்சம் பேர் புனிதநீராடல்...! + "||" + Capricorn Sankaranti Festival: 3.5 lakh people bathe in the river Ganges ...!

மகர சங்கராந்தி விழா: கங்கை நதியில் 3.5 லட்சம் பேர் புனிதநீராடல்...!

மகர சங்கராந்தி விழா: கங்கை நதியில் 3.5 லட்சம் பேர் புனிதநீராடல்...!
மகர சங்கராந்தி விழாவை முன்னிட்டு கங்கை நதியில் 3.5 லட்சம் பேர் புனித நீராடினர்.
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் பொங்கல் விழா, மகரசங்கராந்தி விழாவாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனையொட்டி சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் இந்த ஆண்டும் மகர சங்கராந்தி விழா இன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி மேற்குவங்காளம் களைகட்டியது. அதிகாலை சூரிய உதயத்தின்போது கங்கை நதியில் ஏராளமான மக்கள் புனித நீராடினர். கங்கை நதிகரையில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் ஏராளமான  பெண்கள் கலந்து கொண்டனர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கங்கை நதியில் புனித நீராட வந்த மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் சான்றிதழும், கொரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழும் எடுத்து வந்தவர்களுக்கு மட்டுமே கங்கையில் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறு  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் நதியில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடினர். இன்று ஒரேநாளில் கங்கை நதியில் 3.5 லட்சம் மக்கள் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.