தேசிய செய்திகள்

கட்சியில் சீட் கொடுக்க மறுப்பு; காவல் நிலையத்தில் கண்ணீர் விட்ட தொண்டர் + "||" + Refusal to give seats in the party; Volunteer in tears at police station

கட்சியில் சீட் கொடுக்க மறுப்பு; காவல் நிலையத்தில் கண்ணீர் விட்ட தொண்டர்

கட்சியில் சீட் கொடுக்க மறுப்பு; காவல் நிலையத்தில் கண்ணீர் விட்ட தொண்டர்
உத்தர பிரதேசத்தில் வரவுள்ள சட்டசபை தேர்தலுக்கு சீட் கொடுக்க மறுப்புக்காக பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் காவல் நிலையத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.


லக்னோ,


உத்தர பிரதேசத்தில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டரான அர்ஷத் ராணா என்பவர் முசாபர்நகர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் ஒன்றை தெரிவித்து உள்ளார்.

அதில், தனக்கு சர்தாவல் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கான வாய்ப்பு பற்றிய அறிவிப்பு, 2008ம் ஆண்டு கட்சி வெளியிட்டது.  இதனை தொடர்ந்து விளம்பரங்கள், கட்சி பலகைகள் வைப்பது உள்ளிட்ட பல பணிகளை கட்சிக்காக ஆற்றியுள்ளேன்.  எனினும், போட்டியிட ரூ.50 லட்சம் தரும்படி கேட்டனர்.  அதனையும் கொடுத்தேன்.  இதற்கான சான்றுகள் என்னிடம் உள்ளன.  ஆனால், தற்போது சீட் மறுக்கப்பட்டு உள்ளது.  வேறு ஒருவருக்கு சீட் கொடுக்கப்பட்டு விட்டது என கூறுகின்றனர் என கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

அவரது புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர்; பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே என்கவுண்ட்டர்
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே என்கவுண்ட்டர் நடந்து வருகிறது.
2. கேமரூனில் வர்த்தக கண்காட்சியில் குண்டுவெடிப்பு; 10 பேர் காயம்
கேமரூன் நாட்டில் வர்த்தக கண்காட்சியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
3. மேகாலயா முதல் மந்திரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
மேகாலயா முதல் மந்திரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது.
4. காஷ்மீரில் பயங்கரவாதிகள் எறிகுண்டு வீச்சு; சி.ஆர்.பி.எப். வீரர் காயம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் எறிகுண்டு வீசியதில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார்.