தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பாஜகவின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுகின்றன - அகிலேஷ் யாதவ் + "||" + BJP's wickets fall one by one in Uttar Pradesh - Akhilesh Yadav

உத்தரபிரதேசத்தில் பாஜகவின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுகின்றன - அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேசத்தில் பாஜகவின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுகின்றன - அகிலேஷ் யாதவ்
உத்தரபிரதேசத்தில் பாஜகவின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுகின்றன என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
லக்னோ,

உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7-ந் தேதிவரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க.வும், கைப்பற்ற எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியும் வரிந்து கட்டுகின்றன.

இந்த நிலையில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மந்திரிசபையில் இருந்து பாஜக முன்னாள் தலைவரும், மந்திரியான (தொழிலாளர் நலத்துறை) சுவாமி பிரசாத் மவுரியா (வயது 68) மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தரம் சிங் சைனி, பகவதி சாகர் மற்றும் வினய் ஷக்யா ஆகியோருடன் நேற்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். 

இந்த நிகழ்ச்சியில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-

‘‘நாங்கள் சட்டப்பேரவை தேர்தலுக்காக காத்திருந்தோம். தற்போது தேர்தல் நெருங்கி வந்து விட்டது. சமாஜ்வாதியும் அம்பேத்கர்வாதியும் இணைந்துள்ளதால் இதை யாராலும் தடுக்க முடியாது. உத்தரபிரதேசத்தில் பாஜகவின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுகின்றன. 

உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கிரிக்கெட் விளையாடத் தெரியாதவர். சுவாமி பிரசாத் மவுரியா தன்னுடன் ஏராளமான தலைவர்களை அழைத்து வந்துள்ளார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து உத்தரபிரதேசத்தின் வளர்ச்சிக்குரிய நல்ல அரசை அமைப்போம்’’

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடத்தையில் சந்தேகம்: 2-வது மனைவியை கொலை செய்த கொலை குற்றவாளி
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கொலை குற்றவாளி தனது 2-வது மனைவியை கொலை செய்துள்ளார்.
2. உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 125 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பிரியங்கா காந்தி..!
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்காக 125 காங்கிரஸ் வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பிரியங்கா வெளியிட்டார்.
3. 3-வது நாளாக உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா
உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா செய்தார். புதிதாக ஒரு பா.ஜனதா எம்.எல்.ஏ., கட்சியை விட்டு விலகினார்.
4. உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா
உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா செய்தார்.
5. உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி - சரத்பவார்
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளதாக சரத்பவார் தெரிவித்துள்ளார்.