மாநில செய்திகள்

2 நாட்கள் விடுமுறை; டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம் + "||" + 2 days leave; Wave crowd at Tasmac stores

2 நாட்கள் விடுமுறை; டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

2 நாட்கள் விடுமுறை; டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு மதுபானம் வாங்க கூட்டம் அலைமோதியது.

சென்னை,


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்பட்டது.  இதனை அடுத்து திருவள்ளுவர் தினம் மற்றும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என அடுத்தடுத்து நாளை முதல் 2 நாட்கள் விடுமுறை வருகிறது.  இதனால், டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகை அன்று மது வாங்க வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுபவர்களுக்கே மதுபானம் விற்பனை உண்டு என்பதனால், பலர் முக கவசம் அணிந்து மதுவை வாங்கி சென்றனர்.

கோவில்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் பெருமளவில் மூடப்பட்டுள்ளன.  இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க கூட்டம் குவிந்து காணப்பட்டது.  2 நாட்கள் தொடர் விடுமுறையால் பெரும்பாலானோர் கூடுதலாக மது பாட்டில்களை வாங்கி கொண்டு சென்றனர்.