மாநில செய்திகள்

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்கு காத்திருப்போரின் எண்ணிக்கை 75.31 லட்சம் - தமிழக அரசு + "||" + 75.31 lakh registered with the employment office and waiting for jobs - Government of Tamil Nadu

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்கு காத்திருப்போரின் எண்ணிக்கை 75.31 லட்சம் - தமிழக அரசு

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்கு காத்திருப்போரின் எண்ணிக்கை 75.31 லட்சம் - தமிழக அரசு
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்கு காத்திருப்போரின் எண்ணிக்கை 75.31 லட்சம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 75 லட்சத்து 31 ஆயிரத்து 122 பேர் காத்திருப்பதாக மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த டிசம்பர் 31-ந்தேதிவரை, மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 75 லட்சத்து 31 ஆயிரத்து 122 நபர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் ஆண்கள் 35 லட்சத்து 35 ஆயிரத்து 992 பேர்; பெண்கள் 39 லட்சத்து 94 ஆயிரத்து 898 பேர் பெண்கள், 232 பேர் மூன்றாம் பாலினத்தவர். 

பதிவு செய்துள்ளவர்களில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 25 ஆயிரத்து 668 பேரும்; 19 முதல் 23 வயது வரையுள்ள பல்வேறு தரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 15 லட்சத்து 50 ஆயிரத்து 245 பேரும்; 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 28 லட்சத்து 30 ஆயிரத்து 275 பேரும்; 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 13 லட்சத்து 13 ஆயிரத்து 652 பேரும்; 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11 ஆயிரத்து 282 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 414 பேர் என்று அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு
மணிப்பூரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.
2. ஜல்லிக்கட்டு போட்டி; வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு, இரண்டு வேளை உணவு: அமைச்சர் தகவல்
ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் மாநகராட்சி ஆணையர் தலைமையிலும், பாலமேடு, அலங்காநல்லூரில் ஆட்சியர் தலைமையிலும் நடைபெறும்.
3. சிலியில் வலிமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.9 ஆக பதிவு
சிலி நாட்டின் கடற்கரையோர பகுதியில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. பூடானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு
பூடானில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. தமிழகம், புதுச்சேரியில் 56% அதிக மழை பதிவு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பொழிவு இயல்பை விட 56 சதவீதம் அதிகம் பதிவாகி உள்ளது.