மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 19-ந்தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை + "||" + Urban Local Government Election: State Election Commission Consultation with Political Parties on 19th

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 19-ந்தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 19-ந்தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து 19-ந்தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.
சென்னை, 

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சாதாரண தேர்தலை சுமுகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கூட்டரங்கில் அன்றைய தினம் பகல் 11.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் டி.மோகன் தலைமையில் நடைபெற்றது.
2. விழுப்புரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி விழுப்புரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது.
3. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி - பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிகவில் செயல்தலைவர் பதவி ஏற்படுத்துவது தொடர்பாக விஜயகாந்த் அறிவிப்பார் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
4. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறவேண்டும்: மு.க.ஸ்டாலின்
விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்றும், கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை மாவட்ட அளவிலேயே முடித்துக்கொள்ளுமாறும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
5. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் வெளியீடு
நெல்லை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.