உலக செய்திகள்

பிரான்சை புரட்டி எடுக்கு கொரோனா: ஒரேநாளில் 3 லட்சம் பேருக்கு தொற்று உறுதி...! + "||" + Corona exposure has been confirmed for 3,29,371 new people in France

பிரான்சை புரட்டி எடுக்கு கொரோனா: ஒரேநாளில் 3 லட்சம் பேருக்கு தொற்று உறுதி...!

பிரான்சை புரட்டி எடுக்கு கொரோனா: ஒரேநாளில் 3 லட்சம் பேருக்கு தொற்று உறுதி...!
பிரான்சில் புதிதாக 3,29,371 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாரிஸ்,

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா புதுப்புது அவதாரம் எடுத்து மக்களை வேட்டையாடி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரான்ஸ் தற்போது 5-வது இடத்தில் நீடிக்கிறது. 

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 371 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 35 லட்சத்து 69 ஆயிரத்து 675 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் ஒரே நாளில் 191 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,26,721 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 89,61,841ஆக உயர்ந்துள்ளது. தற்போது 44,81,113 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரான்சில் கண்டறியப்பட்டுள்ள புதிய வைரசால் அச்சுறுத்தலா..? உலக சுகாதார அமைப்பு தகவல்
பிரான்சில் கண்டறியப்பட்டுள்ள புதிய வைரசால் அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
2. பிரான்ஸ்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம்..!
இந்த வாரத்திலிருந்து இந்த தற்காலிக நடைமுறை கடைபிடிக்கப்படும்.தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியதும் இந்த நடைமுறை ரத்து செய்யப்படும்.
3. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 15 முதல் 18 வயதுடைய 29,167 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது-கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுடைய 29,167 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்தார்.
4. பிரான்சில் புதிய வகை கொரோனா- 12 பேருக்கு பாதிப்பு எனத் தகவல்
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா இன்னும் உலக நாடுகளை விழி பிதுங்க வைத்து வருகிறது.
5. பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 874 கார்களுக்கு தீ வைப்பு
புத்தாண்டை வரவேற்கும் விதமாக கார்களுக்கு தீ வைக்கும் நிகழ்ச்சி பிரபலமாகி வருகிறது.