தேசிய செய்திகள்

பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் தான் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்- ஆர்.எஸ்.எஸ். + "||" + Muslims most secure and happy under BJP rule says RSS Muslim body

பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் தான் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்- ஆர்.எஸ்.எஸ்.

பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் தான் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்- ஆர்.எஸ்.எஸ்.
பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் ''இஸ்லாமியர்கள் மிகவும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும்'' இருப்பதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி

ஆர்எஸ்எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவு முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கூறியதாவது:-

எதிர்வரும் ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில், இஸ்லாமியர்கள் பா. ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். பா.ஜனதா ஆளும் மாநிலங்களில்  முஸ்லிம்கள் மிகவும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளனர். காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இஸ்லாமியர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றன.ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த சமூகத்தினருக்கு வறுமை, கல்வியறிவின்மை, பின்தங்கிய நிலை போன்ற கொடுமைகளை அளித்தன.

மத்திய அரசு மற்றும் பா. ஜனதா கட்சி ஆட்சியில் உள்ள மாநில அரசுகள் இஸ்லாமியர்களுக்காக அமல்படுத்திய நலத்திட்டங்களை பட்டியலிட்ட  முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், பாஜகதான் இஸ்லாமியர்களுக்கு ''மிகப்பெரிய நலம் விரும்பி'' என்று தெரிவித்துள்ளது.

நிவேதன் பத்ரா'என்ற அறிக்கையை தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் விநியோகிப்பதற்காக இந்த அமைப்பு தயார் செய்து வைத்துள்ளது.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பா,ஜனதாவுக்கு வாக்களிக்க சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதாவை தோற்கடித்து விலைவாசி உயர்வுக்கு முடிவுகட்ட மக்களுக்கு வாய்ப்பு: காங்கிரஸ்
5 மாநில தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடித்து விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்துக்கு முடிவு கட்ட மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
2. பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடித்தால் அரசியல் சாசனத்திற்கு ஆபத்து - மல்லிகார்ஜுன கார்கே
பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் அரசியல் சாசனத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
3. பா.ஜனதா பிரித்தாளும் என்பதை 25 ஆண்டுகளுக்கு முன்பே சரத்பவார் கூறிவிட்டார்: சஞ்சய் ராவத் எம்.பி
பா.ஜனதா பிரித்தாளும் என்பதை 25 ஆண்டுகளுக்கு முன்பே சரத்பவார் கூறிவிட்டார் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.
4. முல்லைப் பெரியாறு அணையின் தமிழக உரிமையை மீட்க கோரி கலெக்டர் அலுவலகம் முன் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
முல்லைப் பெரியாறு அணையின் தமிழக உரிமையை மீட்க கோரி தேனி கலெக்டர் அலுவலகம் முன் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
5. பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது
பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் அடுத்த ஆண்டு நடைபெறும் 5 மாநில சட்டசபை தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.